நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக டிம் செளதி தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ல் நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து வில்லியம்சன் விலகியதைத் தொடர்ந்து, டிம் செளதி டெஸ்ட் அணியை வழிநடத்தினார்.
இவரது தலைமையில் 14 டெஸ்டுகளில் விளையாடிய நியூசிலாந்து அணி 6-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் அடைந்தது. 2 டெஸ்டுகள் டிரா ஆனது.
சமீபத்தில், இலங்கைக்கு எதிரான தொடரை 0-2 என்ற கணக்கில் முழுமையாக இழந்தது நியூசிலாந்து.
இதன் தொடர்ச்சியாக நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக டிம் செளதி தெரிவித்துள்ளார்.
மேலும், வரவிருக்கும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டாம் லேதம் நியூசிலாந்து கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டாம் லேதம் 2020-2022 வரை 9 டெஸ்டுகளில் கேப்டனாக செயல்பட்டார்.