தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டியில் இந்தியா 21 தங்கப் பதக்கங்கள் உட்பட 48 பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டி கடந்த செப். 11 அன்று தொடங்கி செப். 13 வரை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
29 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச போட்டியை தமிழக தடகள சங்கம் நடத்தியது
இப்போட்டியில் இந்தியாவில் இருந்து 62 வீரர்கள் உட்பட இலங்கை, பாகிஸ்தான், பூட்டான், நேபாளம், வங்கதேசம் மற்றும் மாலத்தீவு என தெற்காசியாவின் 7 நாடுகளில் இருந்து மொத்தம் 173 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இப்போட்டியில் இந்தியா 21 தங்கப் பதக்கங்கள், 22 வெள்ளிப் பதக்கங்கள், 5 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 48 பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.
9 தங்கப் பதக்கங்கள் உட்பட 35 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பிடித்தது இலங்கை.