இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: தெ.ஆ. அணி அறிவிப்பு

முதல் டி20 வருகிற நவம்பர் 8 அன்று நடைபெறுகிறது.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: தெ.ஆ. அணி அறிவிப்பு
@icc
1 min read

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான தெ.ஆ. அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் வருகிற நவம்பர் 8 அன்று தொடங்குகிறது. 2024 டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு பிறகு, இவ்விரு அணிகளும் முதல்முறையாக இத்தொடரில் மோதவுள்ளன.

இந்நிலையில் இத்தொடருக்கான மார்க்ரம் தலைமையிலான தெ.ஆ. அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரபாடாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த யான்சென், கிளாஸன், கேஷவ் மஹாராஜ், டேவிட் மில்லர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். மிஹ்லாலி மபோங்வானா முதல்முறையாக டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி

மார்க்ரம் (கேப்டன்), பார்ட்மன், கூட்ஸியா, டோனோவன் ஃபெரேரா, ரீஸா ஹென்ட்ரிக்ஸ், யான்சென், கிளாஸன், பேட்ரிக் கிருகர், கேஷவ் மஹாராஜ், டேவிட் மில்லர், மிஹ்லாலி மபோங்வானா, பீட்டர், ரிக்கெல்டன், அன்டிலே சிமெலானே, சிப்பாம்லா (3-வது மற்றும் 4-வது டி20 ஆட்டங்களுக்கு மட்டும்), ஸ்டப்ஸ்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 அட்டவணை

முதல் டி20, நவம்பர் 8, டர்பன்

2-வது டி20, நவம்பர் 10, கெபெர்ஹா

3-வது டி20, நவம்பர் 13, செஞ்சுரியன்

4-வது டி20, நவம்பர் 15, ஜோஹானஸ்பர்க்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in