ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: என்ன தான் நடந்தது? | Smriti Mandhana | Palash Muchhal |

ஸ்மிருதி மந்தனாவின் தந்தையைத் தொடர்ந்து, அவர் மணக்கவிருந்த பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Smriti Mandhana's wedding "indefinitely postponed" after her father experiences heart attack symptoms
தந்தையுடன் ஸ்மிருதி மந்தனா (கோப்புப்படம்)
1 min read

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் திருமணம் நிறுத்திவைக்கப்பட்டது. இவரைத் தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா திருமணம் செய்யவிருந்த பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா - இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் திருமணம் மஹாராஷ்டிர மாநிலம் சாங்கிலியில் நவம்பர் 23 அன்று நடைபெறவிருந்தது. திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுகள் அனைத்தும் அரங்கேறி வந்தன. இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டில் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டார்கள். ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து நடனமாடிய காணொளிகள் இணையத்தில் அதிகளவில் பரவி வந்தன.

திருமணம் நடைபெறவிருந்த ஞாயிறன்று காலை ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீநிவாஸ் மந்தனாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. சர்வ்ஹிட் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

ஸ்மிருதி மந்தனாவின் குடும்ப மருத்துவர் நமன் ஷா கூறுகையில், "அவருக்கு இடதுபுற மார்புப் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவக் குறிப்பில் இதை ஏஞ்சினா என்போம். அறிகுறிகள் தென்பட்டவுடன் அவருடைய மகன் என்னை அழைத்தார். நாங்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி வைத்தோம். மருத்துவமனைக்கு மாற்றப்பட்டவுடன் ஈசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்ட்டன. அவரைத் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்றோம்" என்றார் மருத்துவர்.

இதன் காரணமாக திருமணத்தைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க வேண்டும் என ஸ்மிருதி மந்தனா முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. ஸ்மிருதியின் தந்தையைத் தொடர்ந்து, பலாஷும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பலாஷின் தாயார் ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

"ஸ்மிருதியின் தந்தையுடன் பலாஷ் மிகவும் நெருக்கமாக இருந்தார். ஸ்மிருதியை விட பலாஷ் தான் அவருடன் நெருக்கமாக இருந்தார். ஸ்மிருதியின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போனவுடன், ஸ்மிருதிக்கு முன்பு திருமணத்தை ஒத்திவைக்க வேண்டும் என பலாஷ் தான் முடிவு செய்தார். பலாஷ் நிறைய அழுதார். அவருடைய உடல்நிலையும் சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் நான்கு மணி நேரம் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டார். எல்லா மருத்துவப் பரிசோதனை முடிவுகளும் அவர் இயல்பாக இருப்பதாகவே தெரிவிக்கின்றன. இருந்தாலும், அவர் மிகுந்த அழுத்தத்தில் உள்ளார்" என்றார் பலாஷின் தாயார்.

இருவருடைய திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தேதி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனத் தெரிகிறது.

Summary

Smriti Mandhana's wedding "indefinitely postponed" after her father experiences heart attack symptoms.

Smiriti Mandhana | Palash Muchhal | Shrinivas Mandhana | Smiriti Mandhana Wedding |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in