ஸ்மிருதி மந்தனாவுக்கு நவ. 23 திருமணம்: பிரதமர் மோடி வாழ்த்து | Smriti Mandhana |

மணமகன் அணி, மணமகள் அணி இரண்டும் வாழ்க்கை விளையாட்டில் வெற்றி பெறட்டும்....
ஸ்மிருதி மந்தனாவுக்கு நவ. 23 திருமணம்: பிரதமர் மோடி வாழ்த்து
ஸ்மிருதி மந்தனாவுக்கு நவ. 23 திருமணம்: பிரதமர் மோடி வாழ்த்து
2 min read

இந்திய மகளிரணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு வரும் 23 அன்று திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் மகளிரணியின் துணை கேப்டனும், நட்சத்திர வீராங்கனையுமான ஸ்மிருதி மந்தனா மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். 29 வயதாகும் அவர், சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதில் முக்கிய பங்காற்றினார். அந்தப் போட்டியில் ஒரு சதம் இரண்டு அரை சதங்களை அடித்து 434 ரன்களைக் குவித்தார்.

அவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளரான பலாஷ் முச்சலைக் காதலித்து வந்ததாகத் தெரிய வருகிறது. இந்நிலையில், பலாஷ் முச்சலுடன் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்துகொண்டதை காணொளி வெளியிட்டு ஸ்மிருதி மந்தனா உறுதிபடுத்தினார். காணொளியில் மகளிர் அணி வீராங்கனைகள்ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டில், அருந்ததி ரெட்டி மற்றும் ராதா யாதவ் ஆகியோர் முன்னாபாய் படத்தின் பாடலுக்கு நடனமாட, தனது திருமண நிச்சய மோதிரத்தைக் காட்டுகிறார் ஸ்மிருதி மந்தனா.

ஸ்மிருதி மந்தனா, பலாஷ் முச்சில் இருவருக்கும் நவம்பர் 23 அன்று திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து மடல் அனுப்பியுள்ளார். பிரதமரின் மடலில் குறிப்பிட்டுள்ளதாவது:-

”நவம்பர் 23, 2025 அன்று நடைபெறவிருக்கும் ஸ்மிருதி மற்றும் பலாஷ் ஆகியோரின் திருமணத்தைப் பற்றி அறிந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மங்களகரமான மற்றும் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் மந்தனா மற்றும் முச்சல் குடும்பங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும் கைகோத்து நடந்து செல்லும் இந்த தம்பதியினர் ஒருவருக்கொருவர் முன்னிலையில் வலிமையைக் காணட்டும். அவர்களின் இதயங்கள், மனங்கள் மற்றும் ஆன்மாக்கள் இணக்கமாக இருக்கட்டும். அவர்களின் கனவுகள் பின்னிப் பிணைந்து ஒன்றாக வளரட்டும், மகிழ்ச்சி மற்றும் ஆழமான புரிதல் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி அவர்களை வழிநடத்தட்டும். மணமகன் அணி, மணமகள் அணி இரண்டும் வாழ்க்கை விளையாட்டில் வெற்றி பெறட்டும். இந்த முக்கியமான சந்தர்ப்பத்திற்காக தம்பதியினருக்கு எனது ஆசீர்வாதங்களை அனுப்புகிறேன்”என்று வாழ்த்தியுள்ளார்.

Summary

Smiriti Mandhana, important member of the Women's World Cup-winning team, is reportedly set to marry music composer-filmmaker Palash Muchhal on November 23.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in