டபிள்யுபிஎல் போட்டியைப் பிரதிபலித்த ஐபிஎல் இறுதிச் சுற்று

இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்த கேப்டன்கள் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்தவர்களாகவும், அவர்கள் இருவரும் முன்னதாக இந்தியாவை ஐசிசி போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டத்தில் தோற்கடித்ததாலும்........
டபிள்யுபிஎல் போட்டியைப் பிரதிபலித்த ஐபிஎல் இறுதிச் சுற்று
டபிள்யுபிஎல் போட்டியைப் பிரதிபலித்த ஐபிஎல் இறுதிச் சுற்று

ஐபிஎல் இறுதிச் சுற்று மற்றும் இதே ஆண்டில் நடைபெற்ற டபிள்யுபிஎல் இறுதிச் சுற்றையும் ஒப்பிடும் போது பல எதிர்பாராத ஒற்றுமைகள் நிகழ்ந்துள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிச் சுற்றில் சன்ரைசர்ஸ் அணியை மிக எளிதாக வென்று மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையைத் தட்டிச் சென்றது கேகேஆர் அணி.

இதில் சன்ரைசர்ஸ் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 10.3 ஓவர்களில் இலக்கை அடைந்த கேகேஆர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதே போல கடந்த மார்ச் 17 அன்று நடைபெற்ற டபிள்யுபிஎல் இறுதிச் சுற்றில் தில்லி கேபிடல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் பிறகு 114 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும், இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்த கேப்டன்கள் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்தவர்களாகவும், அவர்கள் இருவரும் முன்னதாக இந்தியாவை ஐசிசி போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டத்தில் தோற்கடித்ததாலும் இந்த இரு ஆட்டங்களில் இடையே பல ஒற்றுமைகளைப் பார்க்க முடிகிறது.

டபிள்யுபிஎல் இறுதிச் சுற்று:

தில்லியை 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல்அவுட் செய்த ஆர்சிபி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

ஆஸி. கேப்டன் மெக் லேனிங் தலைமையில் விளையாடியது தில்லி. அவர், இந்தியாவை ஐசிசி போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டத்தில் தோற்கடித்துள்ளார். 2020 மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிச் சுற்றில் மெக் லேனிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தியது.

ஐபிஎல் இறுதிச் சுற்று:

சன்ரைசர்ஸ் அணியை 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல்அவுட் செய்த கேகேஆர் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் தலைமையில் விளையாடியது சன்ரைசர்ஸ். அவர், இந்தியாவை இருமுறை ஐசிசி போட்டிகளின் இறுதிச் சுற்று ஆட்டங்களில் தோற்கடித்துள்ளார். 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிச் சுற்றில் கம்மின்ஸ் தலைமையில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தியது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in