
இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கௌல் தெரிவித்துள்ளார்.
2018-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடிய சித்தார்த் கௌல், கடைசியாக 2019-ல் இந்திய அணிக்காக விளையாடினார்.
2023-24 சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி, பஞ்சாப் அணி அந்த கோப்பையை முதல்முறையாக வெல்ல முக்கிய காரணமாக இருந்தார் சித்தார்த் கௌல்.
கடந்த 17 ஆண்டுகளில் 297 முதல்தர விக்கெட்டுகளையும், 199 லிஸ்ட் ஏ விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள சித்தார்த் கௌல், 2008 யு-19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம்பெற்றார்.
சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி மற்றும் விஜய் ஹசாரே போட்டி வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையுடன் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சித்தார்த் கௌல் தெரிவித்துள்ளார்.
2017, 2018 ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணியில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் ஓய்வை அறிவித்த சித்தார்த் கௌல் மேஜர் லீக் போட்டி, கவுண்டி கிரிக்கெட் உள்பட வெளிநாடு போட்டிகளில் விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.