ஜிம்பாப்வே டி20 தொடர்: கில் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

தமிழ்நாட்டிலிருந்து வாஷிங்டன் சுந்தர் மட்டுமே அணியில் இடம்பிடித்துள்ளார். வருண் சக்ரவர்த்தி, நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஜிம்பாப்வே டி20 தொடர்: கில் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
படம்: https://www.instagram.com/shubmangill/?hl=en

ஜிம்பாப்வேவுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஜூலை முதல் வாரத்தில் ஜிம்பாப்வே பயணிக்கும் இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அனைத்து ஆட்டங்களும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்குத் தொடங்குகின்றன. இந்தத் தொடருக்கு ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி:

ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெயிஸ்வால், ருதுராஜ் கெயிக்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், அவேஷ் கான், கலீல் அஹமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே

ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்பட டி20 உலகக் கோப்பையில் விளையாடி வரும் பெரும்பாலான மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியுடன் பயணித்துள்ளவர்களில் (மாற்று வீரர்கள் உள்பட) கில், ஜெயிஸ்வால், ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், அவேஷ் கான், கலீல் அஹமது ஆகியோர் மட்டுமே இந்தத் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாட்டிலிருந்து வாஷிங்டன் சுந்தர் மட்டுமே அணியில் இடம்பிடித்துள்ளார். வருண் சக்ரவர்த்தி, நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஜிம்பாப்வே டி20 தொடர் அட்டவணை:

  • முதல் டி20 - ஜூலை 6

  • இரண்டாவது டி20 - ஜூலை 7

  • மூன்றாவது டி20 - ஜூலை 10

  • நான்காவது டி20 - ஜூலை 13

  • ஐந்தாவது டி20 - ஜூலை 14

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in