ஹார்திக் பாண்டியாவுடன் மோதல்?: மௌனம் கலைத்த ஷுப்மன் கில்

ஹார்திக் பாண்டியாவும் இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் இதுபற்றி பதிவிட்டுள்ளார்.
ஹார்திக் பாண்டியாவுடன் மோதல்?: மௌனம் கலைத்த ஷுப்மன் கில்
ANI
1 min read

ஹார்திக் பாண்டியாவுடன் மோதல் நிலவி வருவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், இன்ஸ்டகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு பதிலளித்திருக்கிறார் ஷுப்மன் கில்.

ஐபிஎல் 2025-ல் எலிமினேட்டரில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைடன்ஸ் மற்றும் ஹார்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது. குஜராத் டைடன்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த ஆட்டத்துக்குப் பிறகு ஷுப்மன் கில் மற்றும் ஹார்திக் பாண்டியா இடையே மோதல் போக்கு நிலவி வந்ததாக இணையத்தில் பேச்சுகள் எழுந்தன. டாஸின்போது ஹார்திக் பாண்டியா கைக்குலுக்க முயற்சித்தும் கில் அதைப் பொருட்படுத்தாமல் சென்றதாகக் கூறப்பட்டது. கில் விக்கெட்டுக்கு ஹார்திக் பாண்டியா ஆக்ரோஷமாகக் கொண்டாடியதாகக் காணொளிகள் வெளியிடப்பட்டன.

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஹார்திக் பாண்டியாவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் ஷுப்மன் கில்.

இந்த ஸ்டோரியில், "வேறு எதுவும் இல்லை, வெறும் அன்பு மட்டும்தான்" என்று குறிப்பிட்டுள்ள ஷுப்மன் கில், "இணையத்தில் பார்க்கும் அனைத்தையும் நம்ப வேண்டாம்" என்றும் எழுதியுள்ளார்.

ஹார்திக் பாண்டியாவுடன் இருக்கும் இரு புகைப்படங்களை ஷுப்மன் கில் இதில் இணைத்துள்ளார். கில்லின் இந்த ஸ்டோரி மூலம் இணையத்தில் எழுந்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஹார்திக் பாண்டியாவும் 'எப்போபதும்' என்று குறிப்பிட்டு அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in