
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் 269 ரன்கள் குவித்து பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் இரட்டைச் சதமடித்த மூன்றாவது இந்தியர்
சுனில் காவஸ்கர் - 221 (தி ஓவல்)
ராகுல் டிராவிட் - 217 (தி ஓவல்)
ஷுப்மன் கில் - 269 (பிர்மிங்கம்)
இங்கிலாந்தில் இரட்டைச் சதமடித்த முதல் இந்திய கேப்டன்
ஷுப்மன் கில் - 269
இந்திய கேப்டனாக முஹமது அசாருதீன் 179 ரன்கள் எடுத்ததே இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கேப்டனின் அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையாக இருந்தது.
இந்தியாவுக்கு வெளியே இந்திய பேட்டரின் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர்
விரேந்தர் சேவாக் - 309 (முல்தான்)
ராகுல் டிராவிட் - 270 (ராவல்பிண்டி)
ஷுப்மன் கில் - 269 (பிர்மிங்கம்)
ஆசியாவுக்கு வெளியே இந்திய பேட்டரின் அதிகபட்ச ஸ்கோர்
ஷுப்மன் கில் - 269 (பிர்மிங்கம்)
சச்சின் டெண்டுல்கர் - 241* (சிட்னி)
இந்திய கேப்டனின் அதிகபட்ச ஸ்கோர்
ஷுப்மன் கில் - 269 (பிர்மிங்கம்)
விராட் கோலி - 254* (புனே)
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இரட்டைச் சதமடித்த மூன்றாவது வெளிநாட்டு வீரர்
கிரேம் ஸ்மீத் - 277
ஸாஹீர் அப்பாஸ் - 274
ஷுப்மன் கில் - 269
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதமடித்த 5-வது பேட்டர்
சச்சின் டெண்டுல்கர்
விரேந்தர் சேவாக்
ரோஹித் சர்மா
கிறிஸ் கெயில்
ஷுப்மன் கில்
இந்திய டெஸ்ட் பேட்டிங்கில் 4-வது இடம் என்பது சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற மகத்தான வீரர்கள் விளையாடிய இடம். அந்த இடம் தற்போது பொருத்தமான வீரரையே தகவமைத்துக்கொண்டுள்ளது.