டெஸ்ட் கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்: இந்திய அணி அறிவிப்பு!

துணை கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்: இந்திய அணி அறிவிப்பு!
ANI
1 min read

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இங்கிலாந்துக்குப் பயணம் செய்யும் இந்திய அணி 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஜூன் 20-ல் லீட்ஸில் தொடங்குகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஆர் அஸ்வின் உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றுள்ள நிலையில், புதிய தலைமுறை இந்திய அணியை அறிவிக்க வேண்டிய பொறுப்பு பிசிசிஐ-க்கு இருந்தது. ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதால், புதிய கேப்டன் யார் என்ற கேள்வியும் இருந்தது.

அனைவரும் எதிர்பார்த்ததைப்போல ஷுப்மன் கில் டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ரிஷப் பந்த் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். பும்ரா 5 டெஸ்டுகளிலும் விளையாட மாட்டார் என அகர்கர் தெரிவித்துள்ளார். விராட் கோலி இல்லாததால், அணியில் அனுபவம் தேவை என்பதைக் கருதி கருண் நாயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அகர்கர் தெரிவித்தார். சர்ஃபராஸ் கான் அணியில் இடம்பெறவில்லை.

இந்திய அணி

ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர், துணை கேப்டன்), யஷஸ்வி ஜெயிஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா, முஹமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங்

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

  • முதல் டெஸ்ட் - ஜூன் 20 - ஜூன் 24, லீட்ஸ்

  • 2-வது டெஸ்ட் - ஜூலை 2 - ஜூலை 6, பிர்மிங்காம்

  • 3-வது டெஸ்ட் - ஜூலை 10 - ஜூலை 14, லார்ட்ஸ்

  • 4-வது டெஸ்ட் - ஜூலை 23 - ஜூலை 27, மான்செஸ்டர்

  • 5-வது டெஸ்ட் - ஜூலை 31 - ஆகஸ்ட் 4, தி ஓவல்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in