ஐபிஎல் 2024: கேகேஆர் அணியுடன் இணைந்த ஸ்ரேயஸ் ஐயர்

ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஷ்ரேயஸ் ஐயர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேகேஆர் அணியுடன் இணைந்த ஸ்ரேயஸ் ஐயர்
கேகேஆர் அணியுடன் இணைந்த ஸ்ரேயஸ் ஐயர்ANI
1 min read

முதுகு வலியால் பாதிக்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர் ஐபிஎல் போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்பட்ட நிலையில் கேகேஆர் அணியுடன் நேற்று இணைந்தார்.

ஸ்ரேயஸ் ஐயர் முதுகுத் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டதைத் தொடர்ந்து, சமீபத்தில் நடந்த இங்கிலாந்து தொடரில் கடைசி மூன்று டெஸ்டுகளிலிருந்து விலகினார்.

இதன் பிறகு ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றில் மும்பை அணிக்காக விளையாடிய அவர் 2-வது இன்னிங்ஸில் 95 ரன்கள் விளாசினார். இந்த ஆட்டத்தில் முதுகு வலியால் மீண்டும் பாதிக்கப்பட்டார் ஐயர். 4-வது நாள் முழுவதும் ஃபீல்டிங் செய்யாத அவர், முதுகில் ஸ்கேன் செய்வதற்காக மருத்துவமனைக்குச் சென்றார். இதைத் தொடர்ந்து 5-வது நாள் ஆட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.

பரிசோதனை செய்ததைத் தொடர்ந்து ஸ்ரேயஸ் ஐயர் முதுகுத் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் அவர் ஐபிஎல் தொடக்கத்தில் ஒரு சில ஆட்டங்களில் பங்கேற்பது சந்தேகம் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் கேகேஆர் அணியுடன் இணைந்தார் ஸ்ரேயஸ் ஐயர்.

முதுகு வலி காரணமாக கடந்த ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிய ஷ்ரேயஸ் ஐயர், இந்த வருடம் முதல் ஆட்டத்திலிருந்தே பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேகேஆர் அணி தனது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மார்ச் 23 அன்று விளையாடுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in