விலா எலும்பில் காயம்: தீவிர சிகிச்சைப் பிரிவில் ஷ்ரேயஸ் ஐயர் அனுமதி | Shreyas Iyer |

உடல் நிலை சீராக இருப்பதாக பிசிசிஐ தகவல்...
ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியின்போது காயம் ஏற்பட்ட நிலையில் ஷ்ரேயஸ் ஐயர்
ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியின்போது காயம் ஏற்பட்ட நிலையில் ஷ்ரேயஸ் ஐயர்https://x.com/BCCI
1 min read

இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயஸ் ஐயர் ஆஸ்திரேலியாவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில், ஆஸ்திரேலியா 2-க்கு 1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதற்கிடையில் ஆஸ்திரேலியாவுடன் கடந்த அக்டோபர் 25 அன்று நடந்த மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் பின்னோக்கி ஓடிச் சென்று பிடித்தார். ஆனால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு இடது விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் உடனடியாக சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சாய்கியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

“ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கடந்த அக்டோபர் 25 அன்று நடந்த விளையாட்டில் பந்தைப் பிடிக்கச் சென்றபோது ஷ்ரேயஸ் ஐயரின் இடது பக்க கீழ் விலாப் பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது விலா எலும்பு குத்தி ஈரல் பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நலம் சீராக முன்னேறி வருகிறது. இந்திய மருத்துவக் குழு சிட்னியில் தங்கியிருந்து அவரது உடல்நலத்தைக் கண்காணித்து வருகிறார்கள்” என்று கூறினார்.

Summary

India ODI vice-captain Shreyas Iyer has been admitted to a hospital in Sydney and is currently in the Intensive Care Unit after suffering internal bleeding resulting from a rib cage injury sustained during the third match against Australia.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in