சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மே.இ. தீவுகள் வீரர் ஷெனான் கேப்ரியல் ஓய்வு!

59 டெஸ்டுகள், 25 ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் இரண்டு டி20 ஆட்டங்களில் பங்கேற்றார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஷெனான் கேப்ரியல் ஓய்வு!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஷெனான் கேப்ரியல் ஓய்வு! @windiescricket
1 min read

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மே.இ. தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெனான் கேப்ரியல் அறிவித்துள்ளார்.

2012 முதல் 59 டெஸ்டுகளில் விளையாடி 166 விக்கெட்டுகளையும், 25 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 33 விக்கெட்டுகளும், இரண்டு டி20 ஆட்டங்களில் விளையாடி 3 விக்கெட்டுகளையும் விழ்த்தியுள்ள கேப்ரியல் கடைசியாக 2023-ல் இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் விளையாடினார்.

ஒரு டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மே.இ. தீவுகள் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார் கேப்ரியல்.

2018-ல் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஷெனான் கேப்ரியல் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in