.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
அடிப்படை ஆதாரமற்ற விஷயங்களை யாரும் பரப்பக்கூடாது என்று சானியா மிர்ஸா தொடர்புடைய சர்ச்சை குறித்து முஹமது ஷமி பதிலளித்துள்ளார்.
கடைசியாக 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய ஷமி, அதன்பிறகு இந்திய அணி விளையாடிய எந்த ஒரு தொடரிலும் கணுக்கால் காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை.
இதைத் தொடர்ந்து காயத்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார் ஷமி.
இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸாவுக்கும் ஷமிக்கும் திருமணம் நடக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதனை ஷமி மறுத்துள்ளார்.
யூடியூபர் ஷுபாங்கர் மிஸ்ராவுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து ஷமி கூறியதாவது:
“சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். நகைச்சுவைக்காக இவ்வாறு செய்வது நியாயமில்லை. நான் போனைத் திறந்தாலே இதுபோன்ற மீம்ஸ் வருகிறது. விளையாட்டுக்காக செய்வதாக நினைத்து யார் வாழ்க்கையிலும் விளையாடக்கூடாது.
அடிப்படை ஆதாரமற்ற விஷயங்களை யாரும் பரப்பக்கூடாது. அதிகாரபூர்வமான பக்கத்தில் இருந்து இதுபோன்ற செய்திகள் வருவதில்லை. எனவே, தைரியம் இருந்தால் அதிகாரபூர்வமான பக்கத்தில் இருந்து தகவலைப் பரப்புங்கள். அப்போது அதற்கு நான் பதிலளிக்கிறேன்” என்றார்.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் சோயிப் மாலிக்கும் சானியா மிர்சாவும் விவாகரத்து செய்துகொண்டனர்.