விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல்?: குஜராத் கிரிக்கெட் சங்கம் விளக்கம்

“வெப்ப அலை காரணமாகவே ஆர்சிபி அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது”.
கோலி
கோலிANI

வெப்ப அலை காரணமாகவே ஆர்சிபி அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய எலிமினேட்டர் ஆட்டத்தில் ஆர்சிபி - ராஜஸ்தான் அணிகள் அஹமதாபாதில் விளையாடுகின்றன. ஆரம்பத்தில் தொடர்ந்து 6 ஆட்டங்களில் தோல்வி அடைந்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி அணி, திடீரென கடைசி 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அனைவருக்கும் ஆச்சர்யம் அளித்தது ஆர்சிபி அணி.

இந்நிலையில் இன்று ஆர்சிபி அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு, தீவிரவாதிகளிடம் இருந்து விராட் கோலிக்கு வந்த மிரட்டலே காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், “வெப்ப அலை காரணமாகவே ஆர்சிபி அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் ஏதும் இல்லை” என குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் குஜராத் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக இரண்டு நாள்களுக்கு முன்பு அஹமதாபாத் விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் 4 பேரை மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்து விசாரித்து வந்ததாகத் தகவல் வெளியானது.

இது குறித்து குஜராத் காவல் துறை அதிகாரி ஒருவர், “கோலி நம் தேசத்தின் சொத்து, அவருடைய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்போம். ஆபத்தை உணர்ந்து, ஆர்சிபி அணி தங்களின் பயிற்சியை ரத்து செய்வதாக தெரிவித்தனர்” எனக் கூறியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் வெப்ப அலை காரணமாகவே ஆர்சிபி அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in