பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற ஆர்சிபி என்ன செய்ய வேண்டும்?

ஆர்சிபி அணி ஒரே ஒரு வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ஆர்சிபி
ஆர்சிபிANI

புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற என்ன செய்ய வேண்டும்? என்பதை விவரமாக பார்க்கலாம்.

நடப்பு ஐபிஎல் பருவத்தில் 40 ஆட்டங்கள் முடிந்த நிலையில் இன்று ஆர்சிபி - சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆர்சிபி அணி ஒரே ஒரு வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியுமா? என்ற கேள்விக்கு, ‘இல்லை’ என்ற பதிலை சுலபமாக சொல்ல முடியாது. ஏனென்றால், இன்னுமும் ஆர்சிபி அணிக்கு வாய்ப்புள்ளது.

* ஆர்சிபி அணிக்கு இன்னும் 6 ஆட்டங்கள் மீதமுள்ளது. ஒருவேளை ஆர்சிபி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, முதல் 3 இடங்களில் இருக்கும் ராஜஸ்தான், கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் (இன்றைய ஆட்டம் தவிர) அணிகள் இனிவரும் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெறும் பட்சத்தில் ஆர்சிபி 4-வது இடத்துக்கு முன்னேறும்.

* ஆர்சிபி அணி 3-வது இடத்துக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு - ஒருவேளை கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் இனிவரும் ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து, லக்னௌ மற்றும் ஆர்சிபி அணிகள் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் ஆர்சிபி 3-வது இடத்துக்கு முன்னேறும். ஆனால், மற்ற அணிகளின் முடிவுகளும் ஆர்சிபிக்கு சாதகமாக இருக்க வேண்டும்.

* ஆர்சிபி அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் பட்சத்தில், மீண்டும் ஒரே ஒரு வாய்ப்பிருக்கும். அடுத்த 5 ஆட்டங்களிலும் ஆர்சிபி அணி நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் முடிவுகளும் ஆர்சிபிக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in