கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்கிறார் சஞ்சு சாம்சன்!

சஞ்சு சாம்சனின் வருகையின் மூலம் இம்பாக்ட் வீரராக வேறொருவரைக் கூடுதலாக சேர்ப்பதற்கான ஒரு வாய்ப்பும் ராஜஸ்தானுக்கு உருவாகியுள்ளது.
கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்கிறார் சஞ்சு சாம்சன்!
ANI
1 min read

காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைந்த சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்கிறார்.

ஐபிஎல் 2025-க்கு முன்பு கடந்த பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் கடைசி டி20யில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து சஞ்சு சாம்சனின் கைகளைத் தாக்கியது. இதில் சஞ்சு சாம்சனின் விரலில் காயம் ஏற்பட்டது. இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சனுக்குப் பதில் துருவ் ஜுரெல் கீப்பிங் செய்தார்.

ஐபிஎல் 2025 தொடங்கும்போது காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாமல் இருந்தார் சஞ்சு சாம்சன். இதனால், போட்டி தொடங்குவதற்கு முன்பு முதல் மூன்று ஆட்டங்களில் ரியான் பராக் அணியை வழிநடத்துவார் என ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் அறிவித்தது. சஞ்சு சாம்சன் இம்பாக்ட் வீரர் விதியைப் பயன்படுத்தி வெறும் பேட்டராக மட்டுமே விளையாடுவார் எனக் கூறப்பட்டது.

இதன்படி, முதல் மூன்று ஆட்டங்களில் ரியான் பராக் தான் அணியை வழிநடத்தினார். முதலிரு ஆட்டங்களில் தோல்வியடைந்த ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான், சிஎஸ்கேவுக்கு எதிராக மட்டும் வெற்றி பெற்றது. புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. சஞ்சு சாம்சன் மூன்று ஆட்டங்களில் 99 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்நிலையில் காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைந்த சஞ்சு சாம்சன் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்திலிருந்து ராஜஸ்தான் கேப்டனாகவும் கீப்பராகவும் களமிறங்குகிறார். மேலும், சஞ்சு சாம்சனின் வருகையின் மூலம் இம்பாக்ட் வீரராக வேறொருவரைக் கூடுதலாக சேர்ப்பதற்கான ஒரு வாய்ப்பும் ராஜஸ்தானுக்கு உருவாகியுள்ளது.

ராஜஸ்தானின் அடுத்த ஆட்டம்

எதிரணி - பஞ்சாப்

தேதி - ஏப்ரல் 5

நேரம் - இரவு 7.30

இடம் - முல்லாபூர்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in