இலங்கை அணியின் முழுநேர தலைமைப் பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமனம்!

2026 மார்ச் மாதம் வரை இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜெயசூர்யா செயல்படுவார்.
ஜெயசூர்யா
ஜெயசூர்யா @OfficialSLC
1 min read

இலங்கை அணியின் இடைக்காலத் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றி வந்த ஜெயசூர்யா, தற்போது முழுநேர தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் இடைக்காலத் தலைமைப் பயிற்சியாளராக கடந்த ஜூலையில் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டார்.

அவரது தலைமையில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், இங்கிலாந்துக்கு எதிராக ஓவலில் நடைபெற்ற டெஸ்ட், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் என பல வெற்றிகளைக் குவித்தது இலங்கை.

இதைத் தொடர்ந்து ஜெயசூர்யாவின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், 2026 மார்ச் மாதம் வரை இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜெயசூர்யா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கை அணியின் தேர்வுக்குழுவில் அங்கம் வகித்த ஜெயசூர்யா, டி20 உலகக் கோப்பை 2024-ல் இலங்கை அணியின் பேட்டிங் ஆலோசகராகவும் செயல்பட்டார்.

logo
Kizhakku News
kizhakkunews.in