

சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த், நடிகை சம்யுக்தாவின் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் மகன் அனிருதா ஸ்ரீகாந்த். ஐபிஎல் போட்டியில் விளையாடியுள்ள இவர், 2008 முதல் 2013 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். 2014-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்தார்.
தற்போது கிரிக்கெட் வர்ணனை செய்து வருகிறார். மேலும், யூடியூபில் தந்தை ஸ்ரீகாந்துடன் சேர்ந்து யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்த சேனலுக்கு பெரிய வரவேற்பு உள்ளது.
சம்யுக்தா சண்முகநாதன் கடந்த 2007-ல் மிஸ் சென்னை பட்டம் பெற்றார். 2020-ல் பிக் பாஸ் சீசன் 4-ல் பங்கேற்று புகழ்பெற்றார். தமிழில் விஜயின் வாரிசு உள்ளிட்ட படங்களில் சம்யுக்தா நடித்துள்ளார்.
சம்யுக்தா முன்பு கார்த்திக் ஷங்கர் என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்திருந்தார். இத்திருமணம் விவாகரத்தில் முடிந்தது. விவாகரத்துக்கான நடைமுறைகள் அனைத்தும் முடிந்ததாக இந்த ஆண்டு தொடக்கத்தில் சம்யுக்தா அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதன்பிறகு, அனிருதா மற்றும் சம்யுக்தா இடையே காதலுறவு இருப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. தீபாவளியின் போது, சம்யுக்தாவின் கொண்டாட்ட விழாவில் அனிருதா கலந்துகொண்டார். மேலும், சம்யுக்தா மகனின் 10-வது பிறந்தநாள் விழாவிலும் அனிருதா கலந்துகொண்டதாகக் கூறப்படுகின்றன.
இந்நிலையில், அனிருதா-சம்யுக்தா திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றுள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இத்திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணப் புகைப்படங்களை இருவரும் தங்களுடைய சமூக ஊடகப் பக்கங்களில் அதிகாரபூர்வமாகப் பகிர்ந்துள்ளார்கள்.
அனிருதா ஸ்ரீகாந்த் முன்பு ஆர்த்தி வெங்கடேஷ் என்ற மாடலிங் பிரபலத்தைத் திருமணம் செய்திருந்தார். இத்திருமணம் சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்தில் முடிந்தது.
Actress and Model Samyuktha marries to Former Cricketer Aniruda Srikkanth today in Chennai.
Aniruda Srikkanth | Samyuktha | Aniruda |