நடுவர்களிடம் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்

நடுவர்களின் முடிவால் சாம்சன் அதிருப்தியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
சஞ்சு சாம்சனுக்கு அபராதம்
சஞ்சு சாம்சனுக்கு அபராதம்

ஐபிஎல் விதியை மீறியதாக சாம்சனுக்கு ஆட்டத்தின் கட்டணத்தில் இருந்து 30% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் நேற்றைய ஆட்டத்தில் தில்லி - ராஜஸ்தான் அணிகள் தில்லியில் மோதின. இதில், 221 ரன்கள் குவித்து ராஜஸ்தானை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தில்லி அணி. 46 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்து வெளியேறிய சாம்சனின் விக்கெட்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

முகேஷ் குமார் வீசிய பந்தை சாம்சன் தூக்கி அடிக்க, பவுண்டரி எல்லையில் நின்றிருந்த ஹோப் தடுமாறிப் பிடித்துவிட்டார். ஆனால், அவரது கால்கள் பவுண்டரி லைனில் பட்டதுபோல இருந்தது. அது குறித்த சரியான முடிவை எடுக்க முடியவில்லை. எனவே சஞ்சு சாம்சன் அவுட்டா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க நடுவர்கள் நீண்ட நேரத்தை எடுத்துக் கொண்டனர்.

முடிவில் அது அவுட் என அறிவித்தனர். இதனால் சாம்சன் அதிருப்தியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். மேலும், வெளியே செல்லும் போது நடுவர்களுடன் சாம்சன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுப்போல் தெரிந்தது.

இதைத் தொடர்ந்து, சாம்சன் ஐபிஎல் விதியை மீறியதாக அவருக்கு ஆட்டத்தின் கட்டணத்தில் இருந்து 30% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in