ஜிம்பாப்வே டி20 தொடர்: தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!

ஜிதேஷ் சர்மா, ஹர்சித் ராணா ஆகியோர் மாற்று வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சாய் சுதர்சன்
சாய் சுதர்சன்ANI

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் இரண்டு டி20 ஆட்டங்களுக்கு சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா, ஹர்சித் ராணா ஆகியோர் மாற்று வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா- ஜிம்பாப்வே இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஜூலை 6 முதல் தொடங்குகிறது. அனைத்து ஆட்டங்களும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்குத் தொடங்குகின்றன. இத்தொடருக்கு ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இதில் சஞ்சு சாம்சன், துபே, ஜெயிஸ்வால் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அணியிலும் இடம் பெற்றிருந்த இவர்கள் மே.இ. தீவுகளில் இருந்து ஜிம்பாப்வேவுக்கு பயணம் மேற்கொள்ள போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், புயலின் அபாயம் காரணமாக இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் சஞ்சு சாம்சன், துபே, ஜெயிஸ்வால் ஆகியோருக்கு பதிலாக சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா, ஹர்சித் ராணா ஆகியோர் மாற்று வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முதல் இரண்டு டி20 ஆட்டங்களுக்கான இந்திய அணி:

ஷுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், ருதுராஜ் கெயிக்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், அவேஷ் கான், கலீல் அஹமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, ஹர்சித் ராணா.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in