
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-யின் சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
பிசிசிஐ-யின் நமன் விருதுகள் வழங்கும் விழா மும்பையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஐசிசி தலைவர் ஜெய் ஷா, சச்சின் டெண்டுல்கருக்கு விருதை வழங்கினார். இந்த விருதைப் பெறும் 31-வது வீரர் சச்சின் டெண்டுல்கர்.
சிறந்த சர்வதேச கிரிக்கெட்டருக்கான பாலி உம்ரிகர் விருது ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த சர்வதேச கிரிக்கெட்டர் (மகளிர்) மற்றும் 2023-24-ல் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் (மகளிர்) விருதுகள் ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்கப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சிறந்த வீரர் விருது சர்ஃபராஸ் கானுக்கு வழங்கப்பட்டது. இதே விருது மகளிர் பிரிவில் ஆஷா சோபனாவுக்கு வழங்கப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பிசிசிஐ-யின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. 2023-24 காலகட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கான (மகளிர்) விருது தீப்தி ஷர்மாவுக்கு வழங்கப்பட்டது.
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் அணி விழாவில் வைத்து கௌரவிக்கப்பட்டது.