வினேஷ் போகாட்டுக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும்: சச்சின் பதிவு!

வினேஷ் போகாட்டின் பதக்கத்தைப் பறிப்பதில் அர்த்தமில்லை.
சச்சின்
சச்சின்ANI
1 min read

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அனுமதிக்கப்பட்ட 50 கிலோ எடையைக் காட்டிலும் 100 கிராம் கூடுதலாக இருந்ததாகக் கூறி வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றத்திடம் வினேஷ் போகாட் மேல்முறையீடு செய்தார்.

இது தொடர்பான விசாரணையில் ஒலிம்பிக்ஸ் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வினேஷ் போகாட்டுக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று சச்சின் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சச்சினின் பதிவு: “அனைத்து விளையாட்டுக்கென தனி விதிமுறைகள் உள்ளன. சில நேரங்களில் அதை மீண்டும் பார்வையிட வேண்டும். வினேஷ் போகாட் மிகவும் நேர்மையான வழியில் இறுதிச் சுற்று வரை முன்னேறினார்.

ஆனால், இறுதிச் சுற்றுக்கு முன்பு எடைக் கூடுதலாக இருந்ததாகக் கூறி வினேஷ் போகாட்டின் பதக்கத்தைப் பறிப்பதில் அர்த்தமில்லை.

விதியை மீறி ஊக்க மருந்து பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவரின் பதக்கத்தைப் பறிப்பதோ அல்லது அவருக்கு கடைசி இடம் கொடுப்பதோ நியாயமான ஒன்று.

ஆனால் எந்த தவறும் செய்யாமல் தனது திறமையால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய வினேஷ் போகாட்டுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும்.

அவருக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்து அனைவரும் தீர்ப்புக்காக காத்திருப்போம்”.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in