
2025 பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் ஓய்வு பெறும் ஒரு சோகமான ஆண்டாக மாறியுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் வீரர் நிகோலஸ் பூரன் 29 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இப்போது, மற்றொரு டி20 ஜாம்பவான் ஆண்ட்ரே ரஸ்ஸலும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவர்களைப் போல இந்த ஆண்டு பல பிரபலங்கள் ஓய்வை அறிவித்துள்ளார்கள்.
அண்மையில் கோலியும் ரோஹித் சர்மாவும் டெஸ்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்கள்.
ஆஸ்திரேலிய பேட்டர் மேக்ஸ்வெல் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் தென்னாப்பிரிக்க அதிரடி பேட்டர் கிளாசென் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாகக் அண்மையில் அறிவித்தார்கள்.
இந்திய வீரர் பியூஷ் சாவ்லா அனைத்து விதமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இலங்கைப் பிரபலம் மேத்யூஸ் டெஸ்டிலிருந்தும் அண்மையில் ஓய்வு பெற்றார்கள்.
ஆஸி. வீரர் ஸ்டாய்னிஸ் சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
சாம்பியன்ஸ் கோப்பை தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், வங்கதேசத்தின் முஷ்பிகுர் ரஹீம், மஹ்மதுல்லா ஆகியோரும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்கள்.
நியூசிலாந்தின் மார்டின் கப்தில், வங்கதேசத்தின் தமிம் இக்பால், இலங்கையின் டிமுத் கருணாரத்னே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்கள்.
2025-ல் இன்னும் என்னென்ன அதிர்ச்சி அறிவிப்புகளை நாம் காணப் போகிறோமோ!
Andre Russell | Retired Players | International Cricket |