மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் கேப்டனாக ராஸ்டன் சேஸ் நியமனம்

ஜோமெல் வாரிகன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்படம்: https://x.com/windiescricket
1 min read

மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் கேப்டனாக ஆல்-ரவுண்டர் ராஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜோமெல் வாரிகன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் கேப்டனாக கிரெய்க் பிராத்வைட் 2021 முதல் செயல்பட்டு வந்தார். இவருடையத் தலைமையில் 2024-ல் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றது மேற்கிந்தியத் தீவுகள். மேலும், பிராத்வைட் தலைமையிலான அணி நடப்பாண்டு தொடக்கத்தில் 1990-க்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தானில் டெஸ்ட் வெற்றியைப் பெற்றது. 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முடிவில் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து பிராத்வைட் விலகினார்.

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் புதிய கேப்டனாக ராஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆல்-ரவுண்டரான ராஸ்டன் சேஸ் 49 டெஸ்டுகளில் 5 சதங்கள் உள்பட 2,265 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 46 சராசரியில் 85 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் கடைசியாக 2023 மார்சில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடினார். மேற்கிந்தியத் தீவுகள் கடைசியாக விளையாடிய 13 டெஸ்டுகளில் ராஸ்டன் சேஸ் பங்கேற்கவில்லை.

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் முதல் டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது மேற்கிந்தியத் தீவுகள். இதுதான் கேப்டனாக ராஸ்டன் சேஸின் முதல் சவால்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in