மும்பை ஐபிஎல் அணிக்காக 200-வது ஆட்டத்தில் விளையாடும் ரோஹித் சர்மா!

ரோஹித் தலைமையில் 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வென்றது.
மும்பை ஐபிஎல் அணிக்காக 200-வது ஆட்டத்தில் விளையாடும் ரோஹித் சர்மா!
மும்பை ஐபிஎல் அணிக்காக 200-வது ஆட்டத்தில் விளையாடும் ரோஹித் சர்மா!ANI

மும்பை அணிக்காக தனது 200-வது ஐபிஎல் ஆட்டத்தில் விளையாட உள்ளார் ரோஹித் சர்மா.

ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஹைதராபாதில் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களது முதல் வெற்றியை நோக்கி இந்த ஆட்டத்தில் களமிறங்குகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டம் மும்பை அணிக்காக ரோஹித் சர்மா விளையாடும் 200-வது ஆட்டமாகும். இதன் மூலம் மும்பை அணிக்காக இந்த சாதனையை படைக்கும் முதல் வீரர் எனும் பெருமையைப் பெறுவார் ரோஹித். 2011 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரோஹித் சர்மா இதுவரை 199 ஆட்டங்களில் விளையாடி 5084 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 34 அரை சதங்களும் அடங்கும்.

2013-ல் மும்பை அணியின் கேப்டன் ஆனார் ரோஹித் சர்மா. அந்த ஆண்டில் முதல் முறையாக மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் பிறகு அவர் தலைமையில் 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. மேலும் மும்பை அணி இவரது தலைமையில் 2011 மற்றும் 2013 சாம்பியன் லீக் கோப்பையையும் வென்றது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ரோஹித். மேலும் அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன் எனும் பெருமையும் ரோஹித் சர்மாவுக்கு உண்டு.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in