ரஹானே தலைமையில் விளையாடும் ரோஹித்: மும்பை அணி அறிவிப்பு

ரஞ்சி கோப்பையில் ரோஹித் சர்மா கடைசியாக 2015-16-ல் விளையாடினார்.
ரஹானே தலைமையில் விளையாடும் ரோஹித்: மும்பை அணி அறிவிப்பு
ANI
1 min read

ரஞ்சி கோப்பைக்கான அஜின்க்யா ரஹானே தலைமையிலான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த மண்ணில் நியூசிலாந்து டெஸ்ட் தொடரை இழந்தது, 10 ஆண்டுகளுக்குப் பிறகு பிஜிடி தொடரை இழந்தது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறாதது என இந்திய அணி அண்மைக் காலமாக மோசமாக விளையாடி வருகிறது.

இந்த மோசமான செயல்பாட்டால், ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களுடைய ஃபார்ம் விமர்சனத்துக்குள்ளானது.

நியூசிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் பிஜிடி தொடரில் மோசமான ஃபார்மில் இருந்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, சிட்னி டெஸ்டிலிருந்து விலகிக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, இந்திய வீரர்கள் அனைவரும் உள்நாட்டுப் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என பிசிசிஐ கட்டுப்பாடுகள் விதித்தது. சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பின்போது செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித் சர்மா, ரஞ்சி கோப்பையில் தான் விளையாடுவதை உறுதி செய்தார்.

இதற்கு முன்பே அவர் மும்பை அணியுடன் இணைந்து கடந்த 15 அன்று பயிற்சியும் மேற்கொண்டார்.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு எதிரான ஆட்டத்துக்கான ரஹானே தலைமையிலான மும்பை அணியை மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதில் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெயிஸ்வால் ஆகியோரது பெயரும் இடம்பெற்றுள்ளன. இந்த ஆட்டம் ஜனவரி 23 அன்று தொடங்குகிறது.

மும்பை அணி

அஜின்க்யா ரஹானே (கேப்டன்), ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெயிஸ்வால், ஆயுஷ் மஹாத்ரே, ஷ்ரேயஸ் ஐயர், சித்தேஷ் லேட், ஷிவம் துபே, ஹார்திக் தமோர் (விக்கெட் கீப்பர்), ஆகாஷ் ஆனந்த் (விக்கெட் கீப்பர்), தனுஷ் கோட்டியான், ஷாம்ஸ் முலானி, ஹிமன்ஷு சிங், ஷார்துல் தாக்குர், மோஹித் அவஸ்தி, சில்வெஸ்டர் டி சௌஸா, ராய்ஸ்டன் டயஸ், கார்ஷ் கோதாரி.

ரஞ்சி கோப்பையில் ரோஹித் சர்மா கடைசியாக 2015-16-ல் விளையாடினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in