
மூன்று ஐசிசி கோப்பையை வென்ற எம் எஸ் தோனியின் சாதனைக்கு மிக அருகில் சென்றுள்ளார் ரோஹித் சர்மா.
சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்றில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆனது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.
டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ரோஹித் சர்மா வெல்லும் 2-வது ஐசிசி கோப்பை.
டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்கிற சாதனையை நிகழ்த்தியவர் தோனி. இந்த வெற்றியால் தோனியின் சாதனைக்கு மிக அருகில் சென்றுள்ளார் ரோஹித் சர்மா.
தோனி, ரோஹித் சர்மா என இருவருமே தலா 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார்கள்.