பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் ரோஹித் சர்மா பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த இரு டெஸ்ட் தொடர்களையும் கோலி, ரஹானே தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது.
இந்நிலையில் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
நவம்பர் 22-ல் பெர்த் நகரில் தொடங்கும் பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடர், ஜனவரி 7-ல் முடிவடைகிறது.
ஆஸ்திரேலிய அணி கடைசியாக 2014-15 பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரை வென்றது.
இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக இத்தொடரின் முதல் டெஸ்டில் ரோஹித் சர்மா பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக ரோஹித் சர்மா பிசிசிஐயிடம் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.