வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு

ரிஷப் பந்த் டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு
ANI
1 min read

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டுக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷப் பந்த் டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடைசியாக டிசம்பர் 2022-ல் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார்.

இந்தியா, வங்கதேசம் இடையிலான இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19 அன்று தொடங்குகிறது. முதல் டெஸ்ட் சென்னையிலும், இரண்டாவது டெஸ்ட் செப்டம்பர் 27-ல் கான்பூரிலும் தொடங்குகிறது. முதல் டெஸ்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுல் அணிக்குத் திரும்பியுள்ளார். கேஎல் ராகுல் முழுநேர பேட்டராக சேர்க்கப்பட்டுள்ளார். யஷ் தயாலுக்கு முதன்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காயத்திலிருந்து குணமடைந்து வரும் முஹமது ஷமி அணியில் சேர்க்கப்படவில்லை. 16 பேர் கொண்ட அணியில் 4 வேகப்பந்துவீச்சாளர்கள், 4 சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இரு விக்கெட் கீப்பர்கள் இடம்பெற்றுள்ளார்கள். கௌதம் கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் இது. இங்கிலாந்து தொடரில் விளையாடிய ரஜத் படிதார், கேஎஸ் பரத், தேவ்தத் படிக்கல், முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெயிஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், முஹமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யஷ் தயால்.

வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்து, வரலாற்றுச் சிறப்பு வெற்றியுடன் இந்தியா வருகிறது. இதனால், இந்தத் தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in