டி20-யில் போதுமான அளவிற்கு விளையாடிவிட்டதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, ஓய்வுக்கு இதுவே சரியான நேரம் எனக் கூறி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டி20-யில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது ஓய்வு குறித்து பேசியுள்ளார் ரோஹித் சர்மா.
ரோஹித் சர்மா பேசியதாவது
“டி20-யில் போதுமான அளவிற்கு விளையாடிவிட்டேன். 17 ஆண்டுகள் விளையாடியதில் மகிழ்ச்சி. 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, ஓய்வுக்கு இதுவே சரியான நேரம் என எண்ணினேன். இந்தியாவுக்காக சிறப்பாக விளையாட, இன்னும் நிறைய அருமையான வீரர்கள் உள்ளனர். எனவே மற்ற வேலைகளை நாம் பார்க்கலாம் என யோசித்து இந்த முடிவை எடுத்தேன். ஓய்வுக்கு வேறு காரணங்கள் எதுவும் இல்லை. என்னால் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சுலபமாக விளையாட முடியும். ஒருவரின் மனநிலை வலுவாக இருந்தால், அவரால் எதையும் சாதிக்க முடியும். என்னுடைய பலமே எனது தன்னம்பிக்கை தான். உங்களின் உடல் இளமையாக இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களால் எதையும் செய்யமுடியும்”.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
ரோஹித் சர்மா இந்திய அணிக்காக 2007 முதல் 159 ஆட்டங்களில் விளையாடி 5 சதங்கள், 32 அரை சதங்களுடன் 4231 ரன்கள் எடுத்துள்ளார்.