தென்னாப்பிரிக்க ஏ தொடர்: இந்திய ஏ கேப்டனாக பந்த் நியமனம்! | India A | Rishabh Pant |

தமிழக வீரர் சாய் சுதர்சன் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க ஏ தொடர்: இந்திய ஏ கேப்டனாக பந்த் நியமனம்! | India A | Rishabh Pant |
ANI
2 min read

தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான இரு நான்கு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய ஏ அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வீரர் சாய் சுதர்சன் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க ஏ அணி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு இரு நான்கு ஆட்டங்கள் மற்றும் மூன்று ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு நான்கு நாள் ஆட்டங்கள் முறையே அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 6 அன்று பெங்களூருவில் தொடங்குகிறது.

இதற்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. மீண்டும் களத்துக்குத் திரும்பும் ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக வீரர் சாய் சுதர்சன் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மான்செஸ்டர் டெஸ்டின்போது, ரிஷப் பந்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. எலும்பு முறிவு காரணமாக சுமார் 3 மாதங்களாக அவர் ஓய்வில் உள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறும் இரு டெஸ்டுகள் கொண்ட தொடரில் ரிஷப் பந்த் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக காயத்திலிருந்து குணமடைந்துள்ள அவர் ரஞ்சி கோப்பையில் தில்லிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான இரு நான்கு நாள் ஆட்டங்களைக் கொண்ட தொடரில் சேர்க்கப்பட்டு கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார் ரிஷப் பந்த். இதன்மூலம், அக்டோபர் 25 அன்று தொடங்கும் ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தில்லிக்காக அவர் விளையாடப்போவதில்லை. அதேசமயம், இந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் மூலம் இந்திய அணிக்கு ரிஷப் பந்த் மீண்டும் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வீரர் சாய் சுதர்சன் இரு ஆட்டங்களிலும் துணை கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சி கோப்பை நடைபெற்று வருவதால் ரஜத் படிதார், ருதுராஜ் கெயிக்வாட், அபிமன்யு ஈஸ்வரன், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் ஓர் ஆட்டத்தில் மட்டும் விளையாடுகிறார்கள். கேஎல் ராகுல், துருவ் ஜுரெல், பிரசித் கிருஷ்ணா, முஹமது சிராஜ் உள்ளிட்டோர் இரண்டாவது ஆட்டத்தில் மட்டும் விளையாடுகிறார்கள்.

முதல் நான்கு நாள் ஆட்டம்

ரிஷப் பந்த் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆயுஷ் மாத்ரே, என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், ஹர்ஷ் துபே, தனுஷ் கோடியான், மானவ் சுதார், அன்ஷுல் கம்போஜ், யஷ் தாக்குர், ஆயுஷ் பதோனி, சரன்ஷ் ஜெயின், குர்னூர் பிரார், கலீல் அஹமது.

இரண்டாவது நான்கு நாள் ஆட்டம்

ரிஷப் பந்த் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல், துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெயிக்வாட், ஹர்ஷ் துபே, தனுஷ் கோடியான், மானவ் சுதார், கலீல் அஹமது, குர்னூர் பிரார், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முஹமது சிராஜ், ஆகாஷ் தீப்.

Rishabh Pant | India A | South Africa A | Sai Sudharsan |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in