துலீப் கோப்பையின் 2-வது சுற்றுக்கான இந்தியா பி அணியில் ரிங்கு சிங் இடம்பெற்றுள்ளார்.
துலீப் கோப்பை செப். 5 அன்று தொடங்கியது. முதல் சுற்றில் இந்தியா பி அணி இந்தியா ஏ அணியையும், இந்தியா சி அணி இந்தியா டி அணியையும் வீழ்த்தின.
இதில் கே.எல். ராகுல், ரிஷப் பந்த், ஷுப்மன் கில், ஜெயிஸ்வால், ஸ்ரேயஸ் ஐயர் போன்ற பிரபல வீரர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் 2-வது சுற்றில் பங்கேற்கவுள்ள வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரிங்கு சிங் இந்தியா பி அணியில் இடம்பெற்றுள்ளார்.
சமீபத்தில், வங்கதேசத்துக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் டெஸ்டுக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் இடம்பெற்றுள்ள சர்ஃபராஸ் கான் மற்றும் துலீப் கோப்பையின் 2-வது சுற்றில் பங்கேற்கவுள்ளார்.
2-வது சுற்று செப். 12-15 வரை நடைபெறவுள்ளது.