சன்ரைசர்ஸை வீழ்த்தி ஆச்சர்யமளித்த ஆர்சிபி!

சன்ரைசர்ஸ் அணிக்கு இது 3-வது தோல்வியாகும். 2-வது வெற்றியை பெற்றாலும் ஆர்சிபி அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சன்ரைசர்ஸை வீழ்த்தி ஆச்சர்யமளித்த ஆர்சிபி!
சன்ரைசர்ஸை வீழ்த்தி ஆச்சர்யமளித்த ஆர்சிபி!ANI

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் ஹைதராபாதில் விளையாடின. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்ஸி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஆர்சிபி அணி அதிரடியாக தொடங்கியது. 4 ஓவர்களில் 50 ரன்களை நெருங்க டு பிளெஸ்ஸி ஆட்டமிழந்தார். ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு வில் ஜேக்ஸ் 6 ரன்களில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து பட்டிதார் மற்றும் கோலி அருமையான கூட்டணியை அமைத்தனர்.

கோலி சற்று நிதானமாக விளையாட, பட்டிதார் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக மார்கண்டேவின் ஓவரில் 4 சிக்ஸர்களை விளாசினார். அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து வெளியேறினார். 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து உனத்கட் பந்தில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து அரை சதம் அடித்த கோலி 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார். 16 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது ஆர்சிபி.

இதைத் தொடர்ந்து கிரீன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. கிரீன் 5 பவுண்டரிகளுடன் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக உனாட்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் பிறகு விளையாடிய சன்ரைசர்ஸ் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அபிஷேக் சர்மா ஒருபக்கம் அதிரடியாக விளையாட ஹெட் ஒரு ரன்னில் வெளியேறினார். அபிஷேக் சர்மா 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 13 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து ஷாபாஸ் அஹமது, கம்மின்ஸை தவிர வேறு யாரும் பெரியளவில் ரன்களை எடுக்கவில்லை.

ஆர்சிபி அணிக்கு எதிராக இதற்கு முன்பு விளையாடிய ஆட்டத்தில் இமாலய ஸ்கோர் எடுத்து வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி இம்முறை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆர்சிபி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷாபாஸ் அஹமது 40, கம்மின்ஸ் 31 ரன்களும் எடுத்தனர். ஆர்சிபி அணியில் ஸ்வப்னில் சிங், கரண் சர்மா, கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சன்ரைசர்ஸ் அணிக்கு இது 3-வது தோல்வியாகும். 2-வது வெற்றியை பெற்றாலும் ஆர்சிபி அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in