
ஐபிஎல் மெகா ஏலம் நேற்றும் (நவ. 24) இன்றும் (நவ. 25) ஜெட்டாவில் நடைபெற்றது. ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை முதல் நாள் ஏலத்தில் அதிகபட்சமாக ஜோச் ஹேசில்வுட்டை ரூ. 12.50 கோடிக்கும், 2-வது நாள் ஏலத்தில் புவனேஷ்வர் குமாரை ரூ. 10.75 கோடிக்கும் தேர்வு செய்துள்ளது.
முன்னதாக, ஆர்சிபி அணி விராட் கோலி (ரூ. 21 கோடி), ரஜத் படிதார் (ரூ. 11 கோடி), யஷ் தயால் (ரூ. 5 கோடி) ஆகியோரைத் தக்கவைத்துக் கொண்டது.
மொத்தமாக ஆர்சிபி அணியில் 19 வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி தேர்வு செய்த வீரர்கள்:
ஜோஷ் ஹேசில்வுட் - ரூ. 12.50 கோடி
பில் சால்ட் - ரூ. 11. 50 கோடி
ஜிதேஷ் சர்மா - ரூ. 11 கோடி
புவனேஷ்வர் குமார் - ரூ. 10.75 கோடி
லிவிங்ஸ்டன் - ரூ. 8.75 கோடி
ரசிக் தார் - ரூ. 6 கோடி
கிருனாள் பாண்டியா - ரூ. 5.75 கோடி
டிம் டேவிட் - ரூ. 3 கோடி
சுயாஷ் சர்மா - ரூ. 2.60 கோடி
ஜேக்கம் பெத்தல் - ரூ. 2.60 கோடி
படிக்கல் - ரூ. 2 கோடி
நுவான் துஷாரா - ரூ. 1.60 கோடி
ரொமேரியோ ஷெப்பர்ட் - ரூ. 1.50 கோடி
இங்கிடி - ரூ. 1 கோடி
ஸ்வப்னில் சிங் - ரூ. 50 லட்சம்
மனோஜ் பண்டாகே - ரூ. 30 லட்சம்
ஸ்வஸ்திக் சிகாரா - ரூ. 30 லட்சம்
அபினந்தன் சிங் - ரூ. 30 லட்சம்
மோஹித் ராத்தி - ரூ. 30 லட்சம்