
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவில் விராட் கோலி ரூ. 21 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2025-க்கு முன்பு நவம்பர், டிசம்பரில் வீரர்கள் மெகா ஏலம் நடைபெறுகிறது. ஒவ்வொரு அணி நிர்வாகமும் அதிகபட்சம் தலா 6 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு, அணி நிர்வாகங்கள் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலைச் சமர்ப்பிக்க இன்றே (அக்டோபர் 31) இறுதிநாள். இதன்படி, இன்று மாலை 5.30 மணி முதல் ஐபிஎல் அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகத் தொடங்கின.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவில் 3 வீரர்கள் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
விராட் கோலி - ரூ. 21 கோடி
ரஜத் படிதார் - ரூ. ரூ. 11 கோடி
யஷ் தயால் - ரூ. 5 கோடி
கிளென் மேக்ஸ்வெல், முஹமது சிராஜ், பாஃப் டு பிளெஸ்ஸி, கேமரூன் கிரீன் உள்ளிட்டோர் தக்கவைக்கப்படவில்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் மீதமுள்ள தொகை ரூ. 83 கோடி. ஏலத்தின்போது ஆர்டிஎம் முறையில் 3 வீரர்களைத் தேர்வு செய்யலாம். ஒரு அன்கேப்ட் வீரர் மற்றும் இரு கேப்ட் வீரர்கள் அல்லது மூன்று கேப்ட் வீரர்களைத் தேர்வு செய்யலாம்.