மோசமாக நடந்துகொண்ட ஆர்சிபி ரசிகர்கள்: சிஎஸ்கே ரசிகர்கள் குற்றச்சாட்டு

சிஎஸ்கே வீரர்கள் சென்ற பேருந்தை நோக்கி விராட் கோலியின் ஜெர்சியை காட்டியும் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடியுள்ளார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

பெங்களூரு சின்னசாமி மைதானம் வெளியே ஆர்சிபி ரசிகர்கள் மோசமாக நடந்துகொண்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளார்கள்.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் சனிக்கிழமை ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கும். வெற்றி இலக்கான 219 ரன்களுக்குப் பதில் 201 ரன்கள் எடுத்திருந்தாலும் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருக்கும். ஆனால், சிஎஸ்கேவை 191 ரன்களுக்குக் கட்டுப்படுத்தி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்சிபி. இதன்மூலம், நெட் ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கேவை பின்னுக்குத் தள்ளி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ஆர்சிபி.

முதல் 8 ஆட்டங்களில் 7 தோல்விகளைச் சந்தித்து, அடுத்த 6 ஆட்டங்களில் 6 வெற்றிகளைப் பெற்று, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திலிருந்து முன்னேறி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்ததால், இந்த வெற்றி ஆர்சிபி அணிக்குப் பெரும் உத்வேகத்தைத் தந்தது. வெற்றிக் கொண்டாட்டத்தில் தோனியிடம் கைக்குலுக்க ஆர்சிபி வீரர்கள் தாமதித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தற்போது ஆர்சிபி ரசிகர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆட்டம் முடிந்தவுடன் சின்னசாமி மைதானத்தின் வெளியே தங்களிடம் ஆர்சிபி ரசிகர்கள் மோசமாகவும், ஆக்ரோஷமாகவும் நடந்துகொண்டதாக சிஎஸ்கே ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளார்கள். இதுதொடர்பான காணொளிகள் இணையத்தில் அதிகளவில் பரவி வருகின்றன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in