அணியின் பெயரை மாற்றிய ஆர்சிபி

“ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்” என்ற பெயர் “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு” என மாற்றப்பட்டுள்ளது.
அணியின் பெயரை மாற்றிய ஆர்சிபி
அணியின் பெயரை மாற்றிய ஆர்சிபி@RCBTweets

ஆர்சிபி அணி தனது புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்து, அணியின் பெயரையும் மாற்றியுள்ளது.

ஐபிஎல் போட்டி மார்ச் 22 அன்று தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் ஆர்சிபி அணியின் புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ், முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் சமீபத்தில் மகளிர் பிரீமியர் லீக் போட்டியை வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் மந்தனா உட்பட பலரும் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து அணியின் பெயர் மாற்றம் மற்றும் புதிய ஜெர்ஸி தொடர்பான தகவல்களை வெளியிட்டது ஆர்சிபி நிர்வாகம்.

“ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்” என 16 ஆண்டுகளாக இருந்த பெயரை தற்போது “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு” என மாற்றியுள்ளனர்.

மேலும், ஐபிஎல் வரலாற்றில் சாதனைப் படைத்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் ஆர்சிபி அணி கிறிஸ் கெய்ல் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரின் பெயர்களை கடந்த ஆண்டு ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைத்தது. அந்த வகையில் மூன்றாவது வீரராக இப்பட்டியலில் முன்னாள் ஆர்சிபி வீரர் வினய் குமார் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in