டீம் இண்டியாவுக்காக விளையாடவுள்ள அஸ்வின்: அறிவிப்பு | Ravichandran Ashwin | Hong Kong Sixes |

சிறுவயதில் பார்த்த ஹாங்காங் சிக்ஸஸ் போட்டியில் பங்கேற்பது மகிழ்ச்சி என்று அஸ்வின் கருத்து...
டீம் இண்டியாவுக்காக விளையாடவுள்ள அஸ்வின்: அறிவிப்பு | Ravichandran Ashwin | Hong Kong Sixes |
1 min read

ஹாங்காங்கில் நடைபெறும் ஹாங்காங் சிக்ஸஸ் போட்டியில் டீம் இண்டியாவுக்காக அஸ்வின் விளையாட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஐபிஎல் போட்டியிலிருந்தும் சமீபத்தில் ஓய்வு பெற்றார். இந்நிலையில் சிறிது கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆடுகளத்துக்குத் திரும்புகிறார் அஸ்வின்.

ஹாங்காங்கில் நடைபெறவுள்ள ஹாங்காங் சிக்ஸஸ் போட்டியில் டீம் இண்டியாவுக்காக அஸ்வின் விளையாடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறுவயதில் பார்த்த ஹாங்காங் சிக்ஸஸ் போட்டியில் தானும் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக அஸ்வின் கூறியுள்ளார்.

இப்போட்டியில் ஒவ்வொரு அணியும் தலா 6 ஓவர்கள் மட்டும் பேட்டிங் செய்யமுடியும் என்பதால் சிக்ஸர்களுக்கும் ஃபோர்களுக்கும் பஞ்சமே இருக்காது. ஹாங்காங் சிக்ஸஸ் போட்டி நவம்பர் 7-ல் ஆரம்பித்து மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஹாங்காங் நாடுகளைச் சேர்ந்த அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in