ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான ரஷித் கானுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.
ரஷித் கானின் திருமணம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்றது. இதில், முஹமது நபி, முஜீப் உர் ரஹ்மான் உள்பட பல வீரர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
திருமணம் தொடர்பான புகைப்படங்களை அனைவரும் தங்களின் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் வளர்ச்சியில் ரஷித் கானுக்கு அதிக பங்கு உள்ளது. 2015-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ரஷித் கான் இதுவரை 5 டெஸ்டுகளில் 34 விக்கெட்டுகளும், 105 ஒருநாள் ஆட்டங்களில் 190 விக்கெட்டுகளும், 93 டி20 ஆட்டங்களில் 152 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.