
டி20 கிரிக்கெட்டின் ராஜா என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார் ஆஃப்கானிஸ்தானின் பிரபல சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான்.
எஸ்ஏ20யின் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் எம்ஐ கேப்டவுன் முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. இலக்கை விரட்டிய பார்ல் ராயல்ஸ் 160 ரன்களுக்கு சுருண்டது. எம்ஐ கேப்டவுன் அணிக்காக விளையாடிய ரஷித் கான் 33 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டி20யில் மொத்தம் 631 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ரஷித் கான், இந்த இரு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், 633 டி20 விக்கெட்டுகளுடன் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 631 டி20 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலிருந்த டுவெயின் பிராவோவின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
2015-ல் பதின்பருவத்தில் அறிமுகமான ரஷித் கான், 26 வயதிலேயே 161 சர்வதேச டி20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உள்நாட்டுப் போட்டிகள் மற்றும் டி20 லீக் போட்டிகளில் 472 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டி20யில் ரஷித் கான்
ஆட்டங்கள் - 461
விக்கெட்டுகள் - 633
சராசரி - 18.07
எகானமி - 6.49
டி20யில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்
ரஷித் கான் - 633
டுவெயின் பிராவோ - 631
சுனில் நரைன் - 574
இம்ரான் தாஹிர் - 531
ஷகிப் அல் ஹசன் - 492