ரஞ்சி கோப்பை: கேப்டனாக களமிறங்கும் இஷான் கிஷன்!

இஷான் கிஷன், 2023 - 2024 பருவத்துக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.
இஷான் கிஷன்
இஷான் கிஷன்
1 min read

ரஞ்சி கோப்பையின் முதல் இரு ஆட்டங்களுக்கு ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் செயல்படவுள்ளார்.

2024-25 ரஞ்சி கோப்பை அக்டோபர் 11 அன்று தொடங்குகிறது. இந்நிலையில் முதல் இரு ஆட்டங்களுக்கான ஜார்க்கண்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இஷான் கிஷன் கேப்டனாக செயல்படவுள்ளார்.

இஷான் கிஷன் கடைசியாக கடந்த நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் விளையாடினார். கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பையில் பங்கேற்காத இவர், 2023 - 2024 பருவத்துக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து இந்தாண்டு நடைபெற்ற புச்சி பாபு போட்டி, துலீப் கோப்பை ஆகியவற்றில் சதம் அடித்து அசத்திய இஷான் கிஷன் வரவிருக்கும் ரஞ்சி கோப்பையில் கேப்டனாக களமிறங்கவுள்ளார். ஏற்கெனவே 2018 - 19 ரஞ்சி கோப்பையில் இஷான் கிஷன் கேப்டனாக செயல்பட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in