இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. இதைத் தொடர்ந்து, இரு அணிகளும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் இன்று நடைபெறவிருந்தது.
ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க பேட்டர்களாக அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினார்கள். ஹேசில்வுட் வீசிய முதல் ஓவரிலேயே ஒரு பவுண்டரி அடித்து அதிரடிக்கான முனைப்பை வெளிப்படுத்தினார் அபிஷேக் சர்மா.
அடுத்த மூன்று ஓவர்களிலும் தலா இரு பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. ஆனால், நேதன் எல்லிஸ் வீசிய 4-வது ஓவரில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் அபிஷேக் சர்மா. சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் ஹேசில்வுட் பந்தில் இமாலய சிக்ஸரை அடித்தார். 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
உள்நாட்டு நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. இரு அணிகளுக்கும் தலா 18 ஓவர்கள் என ஆட்டம் குறைக்கப்பட்டது. ஆட்டம் மீண்டும் தொடங்கிய பிறகு கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் படிப்படியாக அதிரடிக்கு மாறினார்கள். 9.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்தது இந்தியா. அப்போது மீண்டும் மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
மழை தொடர்ந்து பெய்ததால், ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தார்கள். இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டி20 மெல்போர்னில் அக்டோபர் 31 அன்று நடைபெறுகிறது.
The first T20I between India and Australia was called off due to persistent rain.
IND v AUS | India v Australia | Canberra T20 | 1st T20 | India Tour of Australia | Shubman Gill | Suryakumar Yadav | Abhishek Sharma |