மனைவியைப் பிரிந்தார் சிஎஸ்கே வீரர்! | Rahul Chahar |

சில உறவுகள் என்றென்றும் நிலைத்திருப்பதில்லை. நமக்குக் பாடங்கள் கற்பிக்க, நம்மை மாற்றவே நம் வாழ்வில் இடம்பெறுகின்றன...
மனைவியைப் பிரிந்தார் சிஎஸ்கே வீரர்!
மனைவியைப் பிரிந்தார் சிஎஸ்கே வீரர்!
1 min read

சிஎஸ்கே அணியின் புதிய வீரரான ராகுல் சஹார், தனது மனைவியைப் பிரிவதாக சமூக ஊடகப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிஎஸ்கேவின் புதிய வீரர். பிரபல வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹாரின் உறவினர். ரஞ்சி கோப்பைப் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுபவர். மும்பை அணி 2019, 2020-ல் ஐபிஎல் கோப்பைகளை வென்றபோது அதில் இடம்பெற்றிருந்தார். இதனால் இவருக்கு இந்திய அணியிலும் இடம் கிடைத்தது.

சிஎஸ்கே ரூ. 5.20 கோடிக்கு தேர்வு

ஐபிஎல் 2026 ஏலத்தில் ரூ. 5.20 கோடிக்கு ராகுல் சஹாரைத் தேர்வு செய்தது சிஎஸ்கே அணி. இதற்கு முன்பு புனே, மும்பை, பஞ்சாப், சன்ரைசர்ஸ் அணிகளிலும் இவர் விளையாடியுள்ளார். மேலும் இந்திய அணிக்காக 1 ஒருநாள் ஆட்டத்திலும் 6 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். 2021 டி20 உலகக் கோப்பையில் ராகுல் சஹார் இடம்பெற்றார். அதன் பிறகு இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

ராகுல் சஹாரின் திருமணம்

2022-ல் 22 வயதில் இஷானி ஜோஹர் என்கிறவரை கோவாவில் காதல் திருமணம் செய்தார் ராகுல் சஹார். இஷானி, பெங்களூரில் ஃபேஷன் டிசைனராகப் பணிபுரிந்து வந்தார். வழக்கமாக கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள். இஷானி அதுபோல் இல்லை.

மனைவியைப் பிரிவதாக அறிவிப்பு

இந்நிலையில் தனது மனைவியைப் பிரிவதாக ராகுல் சஹார் அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியதாவது:

“என்னைப் பற்றியும் என் மதிப்பைப் பற்றியும் நான் வாழ விரும்பிய வாழ்க்கையைப் பற்றியும் முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு முன்பே இளம் வயதிலேயே திருமணப் பந்தத்துக்குள் நுழைந்தேன். அதைத் தொடர்ந்து நான் எதிர்பார்க்காத பாடங்கள் கிடைத்தன. கடந்த பதினைந்து மாதங்களாக நீதிமன்றங்களில் நேரத்தைச் செலவிட்டு பொறுமையையும் மனபலத்தையும் கற்றுக்கொண்டேன்.

உறவுகள் என்றும் நிலைத்திருப்பதில்லை

உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு, என் வாழ்க்கையின் ஓர் அத்தியாயம் முறையாக முடிவுக்கு வருகிறது. இந்த அத்தியாயத்தை நான் கோபத்துடனோ வருத்தத்துடனோ முடிக்கவில்லை. ஆனால் தெளிவுடன் முடிக்கிறேன். சில உறவுகள் என்றென்றும் நிலைத்திருப்பதில்லை. நமக்குக் பாடங்கள் கற்பிக்க, நம்மை மாற்றவே நம் வாழ்வில் இடம்பெறுகின்றன.

உருக்கமான பதிவு

இது முடிவல்ல, விடுதலை. இங்கிருந்து நான் உருவாக்கும் அனைத்தும் சுயமரியாதை, அமைதி மற்றும் சிறந்த தேர்வுகளின் அடிப்படையில் இருக்கும் என உறுதியளிக்கிறேன். எந்தக் கசப்பையும் என்னுடன் எடுத்துச் செல்லவில்லை. பாடங்கள், கண்ணியம் மற்றும் வாழ்வை மீண்டும் தொடங்குவதற்கான தைரியம் ஆகியவை மட்டுமே என்னுடன் இனி பயணிக்கும்” என்று உருக்கமாகப் பதிவிட்டு தன்னுடைய மணமுறிவை வெளிப்படுத்தியுள்ளார்.

Summary

CSK's new player Rahul Chahar has posted a post on his social media page announcing his separation from his wife.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in