சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்ற ரஃபேல் நடால்!

22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ரஃபேல் நடால், தனது கடைசி ஆட்டத்தில் தோல்வியடைந்து சர்வதேச டென்னிஸிலிருந்து விடைபெற்றார்.
சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்ற ரஃபேல் நடால்!
@atptour
1 min read

சர்வதேச டென்னிஸிலிருந்து பிரபல வீரர் ரஃபேல் நடால் ஓய்வு பெற்றுள்ளார்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரரான ரஃபேல் நடால் தனது 14 வயதில் தொழில்முறையாக டென்னிஸ் விளையாட தொடங்கினார்.

2005-ல் தனது 18 வயதில் முதன்முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்ற நடால், இதுவரை மொத்தம் 14 முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

அதேபோல், யுஎஸ் ஓபன் பட்டத்தை 4 முறையும், ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை 2 முறையும், விம்பிள்டன் பட்டத்தை 2 முறையும் வென்றுள்ளார்.

தனது டென்னிஸ் வாழ்க்கையில் மொத்தம் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ரஃபேல் நடால் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தார்.

நடப்பு டேவிஸ் கோப்பையே தான் பங்கேற்கும் கடைசி போட்டி என்று அறிவித்த நிலையில், தனது கடைசி ஆட்டத்தில் 4-6, 4-6 என்ற செட் கணக்கில் நெதர்லாந்து வீரரிடம் தோல்வியடைந்து சர்வதேச டென்னிஸிலிருந்து விடைபெற்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in