.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
நடப்பாண்டு யுஎஸ் ஓபன் போட்டியிலிருந்து விலகுவதாக ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார்.
யுஎஸ் ஓபன் 2024 ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 8 வரை நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் யுஎஸ் ஓபன் போட்டியில் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற டென்னிஸ் ஜாம்பவானான ரஃபேல் நடால் இப்போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பெர்லினில் நடைபெறவுள்ள லேவர் கோப்பையில் பங்கேற்பேன் என்றும் அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் நடால் குறிப்பிட்டுள்ளதாவது:
“நடப்பாண்டு யுஎஸ் ஓபன் போட்டியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளேன். இம்முறை என்னால் 100 சதவீத ஆட்டத்தையும் வெளிப்படுத்த முடியாது என்று நினைக்கிறேன். நியூயார்க்கில் எனக்கு பல மறக்க முடியாத நினைவுகள் இருக்கிறது.
அதனை நிச்சயமாக மிஸ் செய்வேன். எனது யுஎஸ் ரசிகர்களுக்கு நன்றி, மற்றொரு நிகழ்வில் உங்களைச் சந்திக்கிறேன்.
அடுத்ததாக பெர்லினில் நடைபெறும் லேவர் கோப்பையில் பங்கேற்பேன்”.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.