டெஸ்ட் தரவரிசை: அஸ்வின் நெ.1
ANI

டெஸ்ட் தரவரிசை: அஸ்வின் நெ.1

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியே முதலிடத்தில் உள்ளது.
Published on

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நெ.1 இடத்துக்கு மீண்டும் முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் 9 விக்கெட்டுகளை எடுத்ததால் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தை அடைந்துள்ளார். இதுவரை ஆறு முறை நெ.1 இடத்தை அவர் பிடித்துள்ளார். ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஹேஸில்வுட் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் இருந்த பும்ரா, 3-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். குல்தீப் யாதவ், 15 இடங்கள் முன்னேறி, 16-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் ரோஹித் சர்மா 6-வது இடத்துக்கும் ஜெயிஸ்வால் 8-வது இடத்துக்கும் ஷுப்மன் கில் 20-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளார்கள். 9 டெஸ்டுகளில் 740 புள்ளிகள் எடுத்துள்ளார் ஜெயிஸ்வால். இதுபோல 9 டெஸ்டுகளின் முடிவில் பிராட்மேன் (752), மைக் ஹஸ்ஸி (741) ஆகியோர் மட்டுமே அதிக புள்ளிகளைப் பெற்றிருந்தார்கள்.

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியே முதலிடத்தில் உள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in