
இந்திய நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து - வெங்ட தத்தா திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று நடைபெற்றது.
தனியார் விடுதியில் பிரமாண்டமாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகத் தெரிகிறது.
நேற்றிரவு 11.20 மணிக்குத் திருமணம் நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களுடையத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாதில் நாளை பிரமாணடமாக நடைபெறவுள்ளது. இதில் நிறைய பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெங்கட தத்தா சாய் ஹைதராபாதைச் சேர்ந்த பாசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
உதய்பூரில் நடைபெற்ற திருமணத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கலந்துகொண்டார். இவர் எக்ஸ் தளத்தில், திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.