
ஐபிஎல் 2025-க்கு முன்பு நவம்பர், டிசம்பரில் வீரர்கள் மெகா ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்துக்கு முன்னதாக, ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் தலா 6 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் அணிகள், தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலைச் சமர்ப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாள். இதன்படி, அக்டோபர் 31 அன்று மாலை 5.30 மணிக்கு தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரங்கள் வெளியாகின.
இதன்மூலம், ஏலத்துக்கு முன்பு ஒவ்வொரு அணியிடமும் மீதமுள்ள தொகை குறித்த விவரங்களும் தெரியவந்துள்ளன. அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் ரூ. 110.50 கோடி வைத்துள்ளது. குறைந்தபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 41 கோடியை வைத்துள்ளது.
மும்பை: ரூ. 45 கோடி
சன்ரைசர்ஸ்: ரூ. 45 கோடி
சிஎஸ்கே: ரூ. 55 கோடி
ஆர்சிபி: ரூ. 83 கோடி
தில்லி: ரூ. 76.25 கோடி
கேகேஆர்: ரூ. 51 கோடி
ராஜஸ்தான்: ரூ. 41 கோடி
குஜராத்: ரூ. 69 கோடி
லக்னௌ: ரூ. 69 கோடி
பஞ்சாப்: ரூ. 110.50 கோடி